Thursday, December 3, 2009

கூந்தலை பராமரிக்க tips

பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும். சிறந்த ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் கூந்தல் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் மட்டும், அத்தகைய கூந்தலை பெற முடியாது. கூந்தல் என்பது வேகமாக வளரும் திசு. எனவே, கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, கார்போஹைடிரேடுகள், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை அவசியம்.புரதச்சத்து:கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள், புரதச்சத்தில் காணப்படுகின்றன. நம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.கார்போஹைடிரேட்:கூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் கார்போஹைடிரேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கார்போஹைடிரேட் சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.கொழுப்பு சத்து:உடலுக்கு நல்ல கொழுப்பு சத்து தேவை. இவை, கூந்தல் வறண்டு போதல், கடினமாதல் மற்றும் பொடுகு ஏற்படுதல் ஆகியவற்றை தடுக்கிறது. எண்ணெய் தன்மை உள்ள மீன்கள், பருப்பு வகைகள், ஆலிவ், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவின் மூலம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து கிடைக்கவில்லை என்றால் டாக்டரின் ஆலோசனை பெறலாம்.வைட்டமின்கள்:*மீன், இறைச்சி, வெண்ணெய், முட்டை, புரோக்கோலி, முட்டைகோஸ், கேரட் மற்றும் ஏப்ரிகாட் ஆகியவற்றில் காணப்படும், “வைட்டமின் ஏ’ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை தலையில் தேவையான எண்ணெய் சுரப்பதை உறுதிசெய்து,தலை போதிய ஈரத்தன்மையுடன் இருக்க உதவுகிறது.* நெல்லிக்காய், கொய்யா, சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள “வைட்டமின் சி’ சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவுஏற்படுவதை தடுக்கிறது.*ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் சி சத்து, தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.*”பயோட்டின்’ கூந்தல், சருமம் மற்றும் நகம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் நரைப்பதை தடுக்கும் கெரட்டின் உற்பத்திக்கு இது உதவுகிறது. கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் உற்பத்திக்கு “நியாசின்’ உதவுகிறது. முட்டை மஞ்சள் கரு, கல்லீரல், அரிசி மற்றும் பால்பொருட்களில் “பயோட்டின்’ நிறைந்துள்ளது.*இரும்புச்சத்து, கூந்தலுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. கூந்தலுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், அவை உடைந்து உதிரத் தொடங்கும். பச்சைக் காய்கறிகள், உலர்ந்த பழங்கள், முட்டை, தர்ப்பூசணி ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம்.கூந்தலின் நெகிழ்வு தன்மைக்கு, ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கூந்தலின் வறண்ட தன்மை நீங்க, தினமும், 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரையிலான தண்ணீர் குடிக்க வேண்டும். முறையான உடற்பயிற்சி, உடலின் அனைத்து செல்களுக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே, வாரத்திற்கு மூன்று நாட்கள், 30 நிமிடங்கள் முறையாக உடற்பயிற்சி செய்தாலே போதுமானது.மேலும், டீ, காபி மற்றும் மது ஆகியவை அருந்துவது, உடலின் தண்ணீர் மற்றும் முக்கிய ஊட்டச் சத்துக்களை வெளியேற்றி விடுகிறது. அவை, உணவில் இருந்து ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதையும் தடுக்கிறது. டீ மற்றும் காபி குடிப்பவர்கள், தினமும் ஒரு கப் என குறைத்துக் கொள்ளலாம். அதற்கு பதிலாக பழச்சாறுகள் போன்றவற்றை குடிக்கலாம்.

Tuesday, July 14, 2009

உடல் பருமனைக் குறைக்க செய்ய வேண்டியவை

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின் படி, உலகில் மிக வேகமாக பெருகிவரும் ஆபத்தாக, சர்க்கரை நோய்க்கு அடுத்த இடத்தில் இருப்பதே உடல் பருமன் எனப்படும் ஒபிஸிட்டி. இது, நேரடி நோயாக கருதப்படாவிட்டாலும், பல்வேறு வியாதிகளுக்குக் காரணமாகிறது என்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
'குண்டாக இருக்கும் நீங்கள் முப்பதே நாட்களில் ஒல்லியாக வேண்டுமா?' என்பது போன்ற விளம்பரங்களில் உள்ள முகவரிகளை நாடலமா என்றும் சிலர் யோசிப்பதும் உண்டு. தேவையின்றி ரிஸ்க் எடுப்பது நல்லதல்ல. இதோ உங்களுக்கு சில எளிய குறிப்புகள். இதனை பின்பற்றுவதும் மிகவும் சுலபம் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

உடல் பருமனின் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்து. நமது உயரத்தின் அளவைப் பொருத்து உடல் எடையும் இருக்க வேண்டும். நமது உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைக் கணக்கிடுவதும் மிகச் சுலபம்.

நமது உயரத்தின் அளவிலிருந்து 100 செ.மீ. அளவைக் குறைத்தால், அதுதான் சரியான உடலின் எடை. உதாரணத்துக்கு நீங்கள் 160 செ.மீ இருக்கிறீர்கள் எனில், 160-100=60. உங்களுக்கான சரியான எடை 60 கிலோகிராம். இதற்கு அதிகமாக இருந்தால், அதைக் குறைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டியது அவசியம்.

உடல் பருமனாவதற்கு, உணவுப் பழக்கவழக்கத்தில் உள்ள குறைபாடு மற்றும் சரிவர உடற்பயிற்சி செய்யாமை இவை இரண்டும்தான் முக்கிய காரணங்கள். ஹார்மோன் கோளாறு காரணமாகவும், பரம்பரை காரணமாகவும் குண்டாகுபவர்களில் சதவிகிதம் மிகக் குறைவுதான்.
உடல் பருமனைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டுமே தவிர, எடைக் குறைப்பதற்கான பிரத்யேக மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது எனபதை கருத்தில் கொள்ள வேண்டும்.

உடல் பருமனைக் குறைக்க செய்ய வேண்டியவை:
* எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
* தினமும் 2-லிருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்
* பட்டினிக் கிடத்தல் கூடாது
* அதிக நொறுக்குத் தீனிகள் கூடாது ௦
* உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை உட்கொள்ளுதலைத் தவிர்க்கவும்
* இனிப்புகள், சர்க்கரை வகைகளை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.
* எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்து வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து வெள்ளைப் பகுதிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்
* கூல் ட்ரிங்ஸ்சுக்கு 'தடா' விதிக்க வேண்டும்.
* தினமும் பழங்கள் உட்கொள்ளலாம் ( 2-லிருந்து 4 வரை)
* இரவு உணவுடன் அவரை, பீன்ஸ், கேரட், கோஸ், காலி ஃப்ளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கி, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 200 கிராம் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.
* 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை கீரை, தட்டைப் பயறு, பச்சைப் பயறு போன்ற பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
* கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.
* கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்தல் மிக நன்று. பாலில் கூட குறைந்த கொழுப்புச் சத்து உள்ள 'டோன்டு மில்க்' வகைகளையே பயன்படுத்துங்கள்.
* அசைவம் விரும்புபவர்கள் தந்தூரி வகைகளையே உட்கொள்வீர். சைனீஸ், இந்தியன் வகை குழம்புகள் வேண்டாம்.
குழந்தைகளுக்கு...
* குழந்தைகளுக்கான உணவில் கீரை, பருப்பு மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்தல்
* கொழுப்புச் சத்து உணவை அதிகமாக தவிர்த்தல்
* சாக்லெட், பிட்ஸா, சிப்ஸ் வகைகள், கூல் ட்ரிங்ஸ் போன்றவற்றை அதிகம் வாங்கிக் கொடுக்காமல், கட்டுக்குள் வைக்க வேண்டும்.
* அதிகம் டி.வி பார்ப்பது, அதிக நேரம் அமர்ந்து கொண்டு வீடியோ கேம்ஸ் விளையாடுவதைத் தவிர்த்தல்
* விளையாட்டு மைதானத்தில் உடல் சிரத்தை கொள்ளும் வகையிலான விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்

Tuesday, June 16, 2009

Health Tips 1

Nutrition and Health Diet

The basic foundation for a healthy individual starts from his foetal stage with proper and healthy nutrition derived from his or her mother. Hence, a pregnant woman's diet stands atop all diets.

Your food shall be your medicine. Ayurveda has postulated the rold of food and especially nutritive foods for maintaining health as well as cure of diseases. Nutrients are necessary for the proper functioning of mental, physical, metabolic, chemical and hormonal activities. The body is like a machine that will repair and rebuild itself provided proper nutrition is provided by way of food.

Sumptous nutrition is available in fruits and vegetables. Fruits have the capacity to give all that a body needs. How to consume? What to consume? Which fruit helps in which way? The answers to these questions can be found in our Nutrition and Healthy Diet Section